சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த மணக்காட்டில் தீவிபத்தில் வீடு இழந்த குடும்பத்தினரை ஒன்றிய சேர்மன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.சேத்தியாத்தோப்பு அடுத்த மணக்காடு காலணியில் தாகப்பிள்ளை, 60; என்பவரது குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.புவனகிரி ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் சென்று தாகப்பிள்ளை குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஜெயசீலன், முன்னாள் சேர்மன் லட்சுமிநாராயணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வராசு, பிரித்திவி, அம்பாள்புரம் சங்கர், உத்திராபதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சபரிராஜன், சற்குரு உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE