வேப்பூர்; முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி, நல்லுார் ஒன்றிய அ.தி.மு.க., வினர் நிராமணியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.ஆவின் சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர்கள் கருப்பையா, டென்சில், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மருத்துவரணி மாவட்ட பொருளாளர் சம்பத், மகளிரணி அம்மு, வழக்கறிஞர் குமரேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். நல்லுார், இலங்கியனுாரிலும் அஞ்சலி செலுத்தினர்.நல்லுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர்., படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பொதுக்குழு உறுப்பினர் செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடியில் கடைவீதி வழியாக கட்சியினர் ஊர்வலமாக சென்று, பஸ் நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையணிவித்தனர். மாவட்ட ஜெ.,பேரவை தலைவர் சுப்ரமணியன, ஒன்றிய செயலாளர் பாஷ்யம், நகர செயலாளர் ஆனந்த பாஸ்கர், கொத்தவாச்சேரி ஊராட்சித் தலைவர் அன்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர தலைவர் கார்த்திகேயன், முன்னாள் பேருர் தலைவர் முத்துலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE