விருத்தாசலம்; விருத்தாசலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு, தி.மு.க., நிர்வாகிகள் நினைவுப்பரிசு வழங்கினர்.விருத்தாசலத்தில் நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன் நினைவுப்பரிசு வழங்கினர்.மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., ரமேஷ் எம்.பி., சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார், நகர செயலாளர் தண்டபாணி, நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், நிர்வாகிகள் பாஸ்கர், பக்கிரிசாமி, அப்துல்லா, சத்யராஜ், பிரபு, கார்த்திக், மதிவாணன், பிரவீன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE