பொது செய்தி

தமிழ்நாடு

நிரந்தர வட்டார மருத்துவ அலுவலர் நியமிக்க துரித நடவடிக்கை தேவை

Added : டிச 25, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர வட்டார மருத்துவ அலுவலர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம், விலங்கல்பட்டு, பத்திரக்கோட்டை, வானமாதேவி, பாலுார்

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர வட்டார மருத்துவ அலுவலர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம், விலங்கல்பட்டு, பத்திரக்கோட்டை, வானமாதேவி, பாலுார் உள்ளிட்ட 30 கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 300 க்கும் மேற்பட்டவர்கள் புறசிகிச்சை நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 24 மணி நேர பிரசவம் பார்க்கும் வசதி உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் 4 மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். வட்டார மருத்துவ அலுவலர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ளது. மேலும் 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள துணை சுகாதாரநிலைய டாக்டரின் கீழ் இந்த சுகாதாரநிலையம் இயங்கி வருகிறது. இதனால் பல பணிகள் பாதிக்கின்றன. இரவு நேரத்தில் செவிலியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் செவிலியர்களிடம் தகராறு செய்கின்றனர்.இந்த சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவ அலுவலர் மற்றும் இரவு நேர டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X