பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி: வேப்பூரில் உதயநிதி பேச்சு

Added : டிச 25, 2020
Share
Advertisement
வேப்பூர்; தமிழக விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாக செயல்படுவது தி.மு.க., தான் என இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி பேசினார்.தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' நிகழ்ச்சிக்கு, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். நிறைவு நிகழ்ச்சியான, வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் ஊராட்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். நல்லுார் ஒன்றிய செயலாளர்

வேப்பூர்; தமிழக விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாக செயல்படுவது தி.மு.க., தான் என இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி பேசினார்.தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' நிகழ்ச்சிக்கு, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். நிறைவு நிகழ்ச்சியான, வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் ஊராட்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். நல்லுார் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் வரவேற்றனர்.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமி, ஒன்றிய அமைப்பாளர் நாராயண சாமி, பெரியநெசலூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் அய்யப்பன், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் தனசேகரன், பாபு, குணா, ராஜா பங்கேற்றனர்.அப்போது, உதயநிதி பேசுகையில், ஜெ., தலைமையிலான ஆட்சி என்று கூறும் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ஆதரித்து விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார். கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது. தமிழக விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக செயல்படுவது தி.மு.க., தான்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X