விருத்தாசலம்; முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி, மாவட்ட ஜெ., பேரவை சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை, என்.எல்.சி., மாற்றுக்குடியிருப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரவை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது.பூத் கமிட்டி துணை செயலாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலாளர் இளையராஜா, ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.விருத்தாசலம் நகர அ.தி.மு.க., சார்பில் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையணிவித்து அன்னதானம் வழங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் சந்திரகுமார், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகராட்சித் தலைவர் அருளழகன், ஐ.டி., அணி கோவை மண்டல துணை செயலாளர் அருண், பாசறை மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம் பாலக்கரையில் பாசறை மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் எம்.ஜி.ஆர்., உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம்ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் பூமாலை கேசவன் தலைமை தாங்கினார். முருகுமாறன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையணிவித்தார். ஒன்றிய செயலாளர்கள் கலியமூர்த்தி, ஜோதி பிரகாஷ், சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை சேர்மன் பாலசுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம் உட்பட பலர் பங்கேற் றனர்.சிதம்பரம்எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்தனர். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், நகர செயலாளர் செந்தில் குமார், முன்னாள் நகர செயலாளர் தோப்பு சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர் காட்டுமன்னார்கோவில் தெக்கிருப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு முருகுமாறன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவக்குமார், நகர செயலாளர் எம்.ஜி.ஆர் தாசன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அசோகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அறிவுக்கரசன் உட்பட பலர் பங்கேற்றனர். காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார். ஒன்றிய செயலாளர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர்.திட்டக்குடிகடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,சார்பில், திட்டக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பங்கேற்று எம்.ஜி.ஆர்.,படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் ராமு, திட்டக்குடி நகர செயலாளர் நீதிமன்னன், ஜெ.,பேரவைசெயலர் செல்வராஜ், மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாகை இளங்கோவன், தெற்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற் றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE