இஸ்லாமாபாத்: “தற்போது இருக்கும் சூழலில், இந்தியாவுடன் பேச்சு நடத்த முடியாது,” என, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதல்களை நடத்த, பயங்கரவாதிகள் சதித் திட்டங்களை தீட்டுகின்றனர். எனினும் அவற்றை, நம் எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகின்றனர்.
இதற்கிடையே, லடாக் எல்லைப் பகுதியில், சீன ராணுவமும், அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. எல்லையில் இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, இருநாட்டு உயரதிகாரிகளும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். எனினும், பாக்., தரப்பில், எந்தவொரு முயற்சியும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. தீவிரவாதத்தை ஒழிக்க, இதுவரை எந்த நடவடிக்கையையும், பாக்., எடுக்கவில்லை.

இந்தியா - பாக் இடையே, மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நேற்று நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவுடனான உறவு குறித்தும், சில கருத்துக்களை அவர் முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில்,“தற்போது இருக்கும் சூழலில், இப்போது இந்தியாவுடன் பேச்சு நடத்த, எங்களால் முடியாது. இந்த நேரத்தில் பேச்சு நடத்துவதற்கு, சூழல்கள் சாதகமாக இல்லை,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE