கட்டுமான பொருள் திருட்டுதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, காரணி நிஜாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், பெருமாள் மகன் சுரேஷ், 34. இவர், இதே பகுதியில் கட்டப்பட்டு வரும், தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த, 19ம் தேதி, கட்டுமான பொருட்களான, துளையிடும் இயந்திரம், கட்டு கம்பி உள்ளிட்டவற்றை, ஒரு அணையில் வைத்து விட்டு, வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை வந்து பார்த்த போது, அந்த பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து, சுரேஷ் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி, கே.கே.சத்திரம் விஜயராமன், 29, முருகன், 48 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.13 டூ - வீலர்கள் மீட்புஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில், 10க்கும் மேற்பட்ட டூ - வீலர்கள், பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.வெங்கல் போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை செய்தனர். அங்கு, 13 டூ - வீலர்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது தெரிந்தது.போலீசார் மேற்கண்ட டூ -- வீலர்களை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து, வாகனங்களின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.கஞ்சா விற்றவர் கைதுஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில், கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், டூ --- வீலருடன் நின்று இருந்த ஒருவரை போலீசார் சோதனை செய்தனர்.அவரிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரை விசாரித்ததில், கன்னிகைப்பேர் விஸ்வா, 20, என, தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE