பொது செய்தி

தமிழ்நாடு

சேதம் அடைந்து இருக்கும் தரைப்பாலம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
பொன்னேரி; சிரளப்பாக்கம்- - அண்ணாமலைச்சேரி சாலையில் தரைப்பாலம் சேதம் அடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பொன்னேரி அடுத்த, சிரளப்பாக்கம் கிராமத்தில் இருந்து, அண்ணாமலைச்சேரி மீனவ கிராமத்திற்கு செல்லும் சாலையில், கழிமுகப் பகுதியில், தரைப்பாலம் ஒன்று, பராமரிப்பு இன்றி இருக்கிறது.தரைப்பாலத்தின் மேல் பகுதியில், ஓட்டைகள் ஏற்பட்டு அதில், செங்கற்கள்

பொன்னேரி; சிரளப்பாக்கம்- - அண்ணாமலைச்சேரி சாலையில் தரைப்பாலம் சேதம் அடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பொன்னேரி அடுத்த, சிரளப்பாக்கம் கிராமத்தில் இருந்து, அண்ணாமலைச்சேரி மீனவ கிராமத்திற்கு செல்லும் சாலையில், கழிமுகப் பகுதியில், தரைப்பாலம் ஒன்று, பராமரிப்பு இன்றி இருக்கிறது.தரைப்பாலத்தின் மேல் பகுதியில், ஓட்டைகள் ஏற்பட்டு அதில், செங்கற்கள் போட்டு அடைக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே பாலம் உள்வாங்கி, குண்டும் குழியுமாக இருக்கிறது.தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் பாலத்தினை கடக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.தடுப்பு சுவர் இல்லாததால், வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி, கழிமுகப் பகுதியில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த சாலை வழியாக அரசு பஸ்கள் சென்று வருகின்றன.அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட தரைப்பாலத்தினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X