பொது செய்தி

தமிழ்நாடு

கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்பு: விவசாயம் 'கனஜோர்'

Added : டிச 25, 2020
Share
Advertisement
கடம்பத்துார்; கடம்பத்துார் அருகே, அதிகாரிகள் அலட்சியத்தால், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து, விவசாயம் கனஜோராக நடந்து வருகிறது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டிலிருந்து பிரிந்து வருகிறது கூவம் ஆறு. இந்த ஆறு, பேரம்பாக்கம், கடம்பத்துார், மணவாள நகர், பூந்தமல்லி, மதுரவாயல் வழியாக, சென்னையில் கடலில் கலக்கிறது.இந்த கூவம் ஆற்றை, பொதுப்பணித் துறையினர்

கடம்பத்துார்; கடம்பத்துார் அருகே, அதிகாரிகள் அலட்சியத்தால், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து, விவசாயம் கனஜோராக நடந்து வருகிறது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டிலிருந்து பிரிந்து வருகிறது கூவம் ஆறு. இந்த ஆறு, பேரம்பாக்கம், கடம்பத்துார், மணவாள நகர், பூந்தமல்லி, மதுரவாயல் வழியாக, சென்னையில் கடலில் கலக்கிறது.இந்த கூவம் ஆற்றை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால், கூவம் ஆறு, பல இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதராகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கியுள்ளது.இதனால், கூவம் ஆற்றில், மழை நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடம்பத்துார் ஒன்றியம், அதிகத்துார் பகுதியில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து, விவசாயம் கனஜோராக நடந்து வருகிறது.இதேபோல், கூவம் ஆற்றில், மணல் திருட்டும் அமோகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய வருவாய் துறையினரும், காவல் துறையினரும், கண்டும் காணாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.எனவே, கலெக்டர் தலையிட்டு, கூவம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், மணல் திருட்டை தடுக்கவும், கருவேல மரங்களை அகற்றவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கூவம் ஆற்றுப் பகுதியில், எல்லைப் பகுதிகளை சர்வே செய்து அளந்து தர மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்.''சர்வே செய்து எல்லைக்கள் அமைத்த பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X