மதுராந்தகம்; வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், சுற்றுலா பயணியர் வசதிக்காக கட்டிய, 25 லட்சம் ரூபாய் செலவிலான, புதிய நவீன கழிப்பறை கட்டடம், பயன்பாட்டிற்கு வந்தது.மதுராந்தகம் அடுத்த, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, சீசன் காலத்தில், பல பகுதி களில் இருந்து நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.பயணியரின் வசதிக்காக, சென்னை மென்பொருள் தனியார் நிறுவனம் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து, 25 லட்சம் ரூபாய் செலவில், புதிய நவீன கழிப்பறை கட்டியது.பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முன்தினம் திறப்பு விழா நடந்தது. மென்பொருள் நிறுவன இயக்குனர் சீனிவாசன் பங்கேற்று, திறந்து வைத்தார்.அப்போது, நிருபர்களிடம் வேடந்தாங்கல் வன சரக அலுவலர் சுப்பையா கூறுகையில், ''தமிழகத்தில், அனைத்து பறவைகள், புலிகள் சரணாலயம் திறக்க, அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கிடைத்ததும் சரணாலயம் திறக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE