சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான அரசு அலுவலர்கள் உடனே விடுதலை

Added : டிச 25, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கைதான பணியாளர்கள் இருவர், ஜாமினில் உடனே விடுவிக்கப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 48. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு சொந்தமான நிலத்தை, குடியிருப்பு பகுதிகளாக மாற்ற, அனுமதி பெற்றுள்ளார்.மேலும், அந்த இடத்தின்

காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கைதான பணியாளர்கள் இருவர், ஜாமினில் உடனே விடுவிக்கப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 48. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு சொந்தமான நிலத்தை, குடியிருப்பு பகுதிகளாக மாற்ற, அனுமதி பெற்றுள்ளார்.மேலும், அந்த இடத்தின் நில மதிப்பு அறிய, மாவட்ட பத்திரப்பதிவு அலுவலரை அணுகிஉள்ளார். அதற்கு, அந்த அலுவலர், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, 50 ஆயிரம் ரூபாய்க்கு முடித்துள்ளார்.பணம் தர விரும்பாத திருநாவுக்கரசு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் அறிவுரைப்படி, நேற்று முன்தினம் மாலை, பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுக்க சென்றார்.அங்கு, பணியில் இருந்த உதவியாளர் சதிஷ்குமார், 34, திருநாவுக்கரசிடம் பணத்தை பெற்று, அலுவலக உதவியாளர் பாலாஜி, 31, என்பவரிடம் கொடுத்தார்.அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.இதையடுத்து, இரவு, 11:00 மணி வரை, பத்திரப்பதிவு அலுவலகத்தில், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.தொடர்ந்து, சதிஷ்குமார், பாலாஜியை, போலீசார் கைது செய்தனர். லஞ்சம் வாங்கி கைதான இருவரையும், போலீசார், ஒரு மணி நேரத்திற்குள் ஜாமினில் உடனே விடுவித்தனர்.இது குறித்து, டி.எஸ்.பி., கலைசெல்வன் கூறுகையில், ''அவர்கள், உடல்நிலை சரியில்லை என கூறியதால், அவர்களை விடுவித்தோம்,'' என்றார்.லஞ்சம் பெற்று கைதானவர்களை, உடல் நலம் சரியில்லை எனக்கூறி விடுவித்தால், லஞ்சம் பெறுவது மேலும் அதிகரிக்கும் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X