உருமாற்றம் பெற்ற கொரோனாவுக்கு புதிதாக 7 அறிகுறிகள்

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
லண்டன்: உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசுக்கு புதிதாக 7 அறிகுறிகள் தெரிவதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனாவில் தோன்றி பூவுலகின் புன்னகையை சிதறடித்த கொரோனா (சார்ஸ் கோவ்-2) வைரசுக்கு இப்போது ஒரு வயதாகிவிட்டது. இதுவரை 222 நாடுகளில் வேட்டை நடத்தி 7.9 கோடி பேரை தாக்கி இருக்கிறது. 17.48 லட்சம் பேரை கொன்றும் இதன் கோரப் பசி அடங்கவில்லை. இயல்பு வாழ்க்கை எட்டிப்
Covid 19, Corona Virus, symptoms

லண்டன்: உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசுக்கு புதிதாக 7 அறிகுறிகள் தெரிவதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றி பூவுலகின் புன்னகையை சிதறடித்த கொரோனா (சார்ஸ் கோவ்-2) வைரசுக்கு இப்போது ஒரு வயதாகிவிட்டது. இதுவரை 222 நாடுகளில் வேட்டை நடத்தி 7.9 கோடி பேரை தாக்கி இருக்கிறது. 17.48 லட்சம் பேரை கொன்றும் இதன் கோரப் பசி அடங்கவில்லை. இயல்பு வாழ்க்கை எட்டிப் பார்ப்பதற்குள் 2ம் அலை பீதியை பரவ விட்டுள்ளது. தற்போது மரபணு மாறி புதுவேடத்தில் அடுத்த வேட்டையை கொரோனா துவங்கி விட்டது. இம்முறை பிரிட்டனில் இருந்து புறப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பரவுவதால் மீண்டும் மக்கள் நிம்மதியை பறி கொடுத்துள்ளனர். இது ஏற்கனவே இருக்கும் வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது என முதற்கட்ட ஆராய்ச்சி எச்சரிக்கை மணி அடித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி மற்றும் தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-டிச-202019:09:03 IST Report Abuse
Endrum Indian ஐயோ நாராயண இப்படி மக்கள் அனைவரும் காரோண மூடர்கள் என்று நினைத்து உளறிக்கொண்டே இருப்பதற்கு ஒரு முடிவேயில்லையா
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-டிச-202019:07:27 IST Report Abuse
Endrum Indian இன்னும் பல பல சேர்க்கலாம் சாப்பாட்டை பார்த்தாலே புடிக்காது,
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-டிச-202013:15:31 IST Report Abuse
S.Baliah Seer பிரிட்டன்,பிரான்ஸ் ,இத்தாலி ,சில ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கி தவிக்கின்றன.அதை மெடிக்கல் பொய்யுரைகளால் சரிக்கட்ட நினைக்கின்றனர்.கொரானாவுக்கு கரு இல்லாதபோது எப்படி உரு மாறும் ? இவர்கள் சொல்லும் புதிய அறிகுறிகளான சோர்வு,பசியின்மை ,தலைவலி ,மனக்குழப்பம் போன்றவை உளவியலின் வெளிப்பாடு.ஒருவனை பயமுறுத்திக் கொண்டே இருந்தால் அந்த பயமே அவனைக் கொன்று விடும்.
Rate this:
TGF - CHENNAI,இந்தியா
25-டிச-202016:02:09 IST Report Abuse
TGFANSWER FOR YOU: TGGGGYTTTACRGGTAACCT-3 AACRCGCTTAACAAAGCACTC-3 TAGTTGTGATGCWATCATGACTAG-3 AATCAGACAAGGAACTGATTA-3 CGAAGGTGTGACTTCCATG-3 GCAAATTGTGCAATTTGCGG-3...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X