சென்னை - வியாசர்பாடி, அம்பேத்கர் சாலையில், சென்னை குடிநீர் வாரியம் தோண்டிய பள்ளத் தால் ஏற்பட்ட ஒயர் துண்டிப்பு காரணமாக, அப்பகுதியில், 1,000 வீடுகளுக்கு பி.எஸ்.என்.எல்., சேவை பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை, வியாசர்பாடி, அம்பேத்கர் சாலையில், சென்னை குடிநீர் வாரியம், அவர்களின் தேவைக்காக, பள்ளம் தோண்டி உள்ளனர். இதில், பி.எஸ்.என்.எல்., ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தடைபட்டுள்ளதுஇதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., தரப்பில் கூறியதாவது:எம்.கே.பி., நகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் ஒயர், வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை வழியாக செல்கிறது. இந்த சாலையில், சென்னை குடிநீர் வாரியம், அவர்களின் தேவைக்காக பள்ளம் தோண்டி உள்ளனர்.இதில், பி.எஸ்.என்.எல்., ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று முன்தினம் இரவி லிருந்து, பி.எஸ்.என்.எல்., சேவை தடைபட்டுள்ளது.இதற்கு முன், இதே பகுதியில் மின்வாரியம் பள்ளம் தோண்டி னர். அப்போதும், பி.எஸ்.என்.எல்., ஒயர் துண்டானது.அதன் காரணமாக வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டது. இந்த சேவை, மற்றொரு தடத்தில் இணைக்கப்பட்டு, சேவை வழங்கப்பட்டு வந்தது.தற்போது, மற்றொரு தட ஒயரும் துண்டிக்கப்பட்டதால், மொத்தமாக சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.இதில், ஆயிரக்கணக்கான லேண்ட்லைன், பிராட்பேண்டு மற்றும் பைபர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளன. வழிகாட்டுதல்கள்மின்வாரிய ஒப்பந்ததாரரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஒயர் துண்டிப்பை சரி செய்து தரவில்லை. தற்போது, சென்னை குடிநீர் வாரியமும் ஒயரை துண்டித்துவிட்டது.இதனால், பொது மக்கள் மட்டுமல்லாமல், அரசு அலுவலக சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள், பி.எஸ்.என்.எல்., ஒயரை கவனத்தில் வைத்து, பள்ளம் தோண்ட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE