சென்னை - சென்னையில் உள்ள, 250 கி.மீ., சாலைகளை புனரமைப்பதற்கான பணிகளை, நெடுஞ்சாலைத்துறை துவங்கியுள்ளது.சென்னையில், அண்ணாசாலை, நுாறடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஜி.என்.டி., சாலை, வால்டாக்ஸ் சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, மடிப்பாக்கம் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட, 250 கி.மீ., சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கிறது.இதில், பல்வேறு சாலைகளில், மெட்ரோ ரயில் பணி, மேம்பாலம் கட்டுமான பணிகள் உள்ளிட்டவை நடக்கின்றன. சென்னை மாநக ராட்சி, குடிநீர் வாரியம், மின் வாரியம் வாயிலாக, பல்வேறு பணிகள் நடக்கின்றன.இதன் காரணமாக, சாலை புனரமைப்பு பணிகள் தாமதமாகி வந்தன. மழையால், பல சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.இதனால், பாதிப்பில்லாமல், போக்குவரத்து நடந்து வருகிறது.சட்டசபை தேர்தலுக்கு முன், சென்னையில் உள்ள நெடுஞ்சாலைகளை சீரமைக்க முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, 250 கி.மீ., சாலைகளிலும், நிரந்தர சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ளவுள்ளனர்.அண்ணாசாலை, நுாறடிச்சாலை ஆகியவற்றை புனரமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதை தொடர்ந்து, படிப்படியாக மற்ற சாலை சீரமைப்பு பணிகள் வேகமெடுக்க உள்ளன. சாலை சீரமைப்பு மட்டு மின்றி, தரைப்பாலம், மழை நீர் வடிகால்வாய் உள்ளிட்ட, கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படஉள்ளன.சென்னையில், 3,000 கி.மீ., சாலைகள், மாநக ராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இவை சேதமடைந்து இருப்பதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இச்சாலைகளை புனரமைக்கவும், முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE