சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு வேலை மோசடி கடலுாரைச் சேர்ந்தோர் கைது

Added : டிச 25, 2020
Share
Advertisement
சென்னை; வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இருவரை, அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.சென்னை, தரமணியைச் சேர்ந்தவர் வள்ளி, 55. இவர், தன் மகனுக்கு, வெளிநாட்டு வேலை தேடி வந்தார். மலேஷியாவில் வேலை வாய்ப்பு உள்ளதாக, 'டிவி' சேனல் ஒன்றில் விளம்பரம் வந்தது.அதில், கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை, தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பேசியவர்கள்

சென்னை; வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இருவரை, அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.சென்னை, தரமணியைச் சேர்ந்தவர் வள்ளி, 55. இவர், தன் மகனுக்கு, வெளிநாட்டு வேலை தேடி வந்தார். மலேஷியாவில் வேலை வாய்ப்பு உள்ளதாக, 'டிவி' சேனல் ஒன்றில் விளம்பரம் வந்தது.அதில், கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை, தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பேசியவர்கள் பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க, முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.இதை நம்பி, அவர்களுக்கு இரு தவணையாக, 47 ஆயிரம் ரூபாயை, வங்கிக் கணக்கில் வள்ளி செலுத்தியுள்ளார். அதன் பின், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டது குறித்து, அடையாறு துணைக் கமிஷனர் விக்ரமிடம், வள்ளி புகார் அளித்தார். அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இதில், வள்ளியிடம் இருந்து வங்கி கணக்கு மூலம் பணம் பெற்றது, கடலுாரைச் சேர்ந்த மணிமாறன், 50, சிவானந்தம், 39, என்பது தெரியவந்தது.மேலும், கடலுார் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர், எஸ்.எஸ்.ஆர்., நகரில், 'சங்கரா தேவி டிராவல்ஸ் அண்டு கன்சல்டன்சி' என்ற பெயரில், நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.அங்கு விரைந்த போலீசார், இருவரையும் பிடித்து, சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். இதில், அவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து, கார், கம்ப்யூட்டர்கள், தொலைபேசிகள், 'ஸ்வைப்பிங் மிஷின்' மற்றும் 20 பாஸ்போர்ட்டுகள், வங்கி கணக்கு புத்தகம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பின், இருவர் மீதும் வழக்கு பதிந்து, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X