சென்னை; கொருக்குப்பேட்டையில், மூளை வளர்ச்சி குன்றிய மூன்றரை வயது குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர்சக்திவேல்; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நதியா, 33. இவர்களுக்கு, இஷாந்த் என்ற மூன்றரை வயது குழந்தை இருந்தான்.மூளை வளர்ச்சி இன்றி பிறந்த இந்த குழந்தைக்கு, வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தை விளையாடும் போது, சுவரில் மோதிக்கொண்டது. காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவில்லை.சில தினங்களுக்கு பின், குழந்தையின் இடது கண் சிவந்து, வெளிப்புறம் வந்ததால், ஜன., 22ல், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு ஒரு வாரம் கழித்து, சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், குழந்தையின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இஷாந்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது. டாக்டர்கள், மன வளர்ச்சி குன்றி பிறந்த குழந்தை, தரையில் உருண்டோ, தவழ்ந்தோ, நடந்தோ செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளது.குழந்தையால் வட்டமிட்டு மட்டுமே செல்ல இயலும். குழந்தை இறக்கும் நிலைக்கு தனக்கு தானே காயம் ஏற்படுத்திக்கொள்ள இயலாது என, போலீசாரிடம் அறிக்கை அளித்தனர்.இதையடுத்து, போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது, குழந்தையின் தாய் நதியா, 'எனக்குஏற்கனவே, எட்டு மாத கரு கலைந்துவிட்டது.'இரண்டாவதாக பிறந்த குழந்தையும், மூளை வளர்ச்சி இன்றியும், வலிப்பு நோயாலும் அவதிப்பட்டு வந்தது. இதனால், குழந்தையை சுவரில் மோதினேன்' என, கூறியுள்ளார்.இதையடுத்து, நதியா மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE