சென்னை; இரு தினங்களாக, சென்னையில், 'சிக்னல்'களில் பிச்சை எடுத்தவர்கள் உட்பட, 10 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.சென்னையில், சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில், பிச்சை எடுத்து வரும் குழந்தைகளை போலீசார் மீட்டு வருகின்றனர். இரு தினங்களாக, சோழிங்கநல்லுார் சிக்னல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பிச்சை எடுத்தவர்கள், செம்மஞ்சேரியில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீன்பிடித்தவர்கள் என, 9 குழந்தைகளை மீட்டு, செங்கல்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம் கெல்லீசில் உள்ள, குழந்தைகள்நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதேபோல, ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லையில், செப்., 19ல் காணாமல் போன குழந்தையை, கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதி என்ற இடத்தில் மீட்டு, நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE