திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் சோனாசுருளி உட்பட பலர் மாலை அணிவித்தனர்.நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
எம்.ஜி.ஆர்., படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், நகர செயலாளர் சிவலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், நகர் பேரவை செயலாளர் சேக்தாவூது, மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, சேக் ஒலி, சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் நிர்வாகிகள் நெப்போலியன், திருமாறன், முத்தையா, ராமமூர்த்தி, நாகராஜன், முனுசாமி, சின்னு, முத்து, ரவிச்சந்திரன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்ட் முன்பு எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணி, நடராஜ், நகர செயலாளர் உதயம்ராமசாமி, பொருளாளர் பழனிவேல் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE