கன்னிவாடி : கன்னிவாடி அருகே மைலாப்பூரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து, ஆத்துார் எம்.எல்.ஏ., பெரியசாமி ஐந்து மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.
குட்டத்துப்பட்டி ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அவில்தார் கண்மாய் மறுகால் செல்வதால், அங்குள்ள தனியார் கிணற்றில் இருந்து குட்டத்துப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் துவக்கினர்.நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி உள்பட அதிகாரிகள், அனுமதியின்றி நடைபெறுவதாகக்கூறி பணியை தடுத்தனர். அங்கு வந்த பெரியசாமி எம்.எல்.ஏ., குழாய் பணியை மேற்கொள்ள வலியுறுத்தி தர்ணா துவக்கினார்.பேச்சுவார்த்தைக்குப்பின்குளத்தில் தண்ணீர் எடுக்காமல் தனியார் கிணற்றில் எடுக்க அனுமதித்தனர்.
மதியம் 3:00 மணிக்கு தர்ணாவை முடித்த பெரியசாமி கூறுகையில், ''10 ஆண்டுகளாக தாமரைக்குளம், பொன்மான்துறை விவசாயிகளை அதிகாரிகள் பழி வாங்கினர். தற்போது ஆவரம்பட்டி கிணற்றில் நீர் எடுத்தால், வேடசந்துார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு நெரி கட்டுகிறது. கலெக்டரிடம் புகார் அளித்து அதிகாரிகளை துாண்டி விட்டுள்ளார். எல்லா தனியார் கிணறு, 100 லாரிகளில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதை எவரும் தடுக்க முடியாது'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE