கோபி: பவானி ஆற்றில் இருந்து, பைக்கில் மணல் கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர். கவுந்தப்பாடி அருகே, சின்னப்புலியூரை சேர்ந்தவர் ஜெயராணி, 31, கிராம நிர்வாக அலுவலர்; இவரும், அவரின் அலுவலக தற்காலிக கிராம உதவியாளர் சக்திவேல், 34, என்பவரும், சிறைமீட்டான்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு தணிக்கைக்கு சென்றனர். அப்போது, ?ஹாண்டா சைன் பைக்கில், நான்கு மணல் மூட்டைகளுடன், இருவர் தப்பிக்க முயன்றனர். அவர்களை வருவாய்த்துறையினர் மடக்கி, கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 24, விஜயராகவன், 32, என தெரியவந்தது. வி.ஏ.ஓ., ஜெயராணி கொடுத்த புகார்படி, இருவரையும் கவுந்தப்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், கடத்த பயன்படுத்திய, பைக் மற்றும் நான்கு மூட்டை மணலை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE