பொது செய்தி

தமிழ்நாடு

புத்திரகவுண்டன்பாளையத்தில் மிக உயரமான இயேசு சிலை

Added : டிச 25, 2020
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடியை சேர்ந்த, டாக்டர் பி.லாசர் வெளியிட்டுள்ள அறிக்கை: வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில், 1957ல், புனித செபஸ்தியார் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. 2008ல், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, அந்த ஆலயம் அகற்றப்பட்டது. பின், சேலம் ஆயர் சிங்கராயர் முயற்சியால், அப்பகுதியிலேயே புது ஆலயம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்

வாழப்பாடி: வாழப்பாடியை சேர்ந்த, டாக்டர் பி.லாசர் வெளியிட்டுள்ள அறிக்கை: வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில், 1957ல், புனித செபஸ்தியார் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. 2008ல், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, அந்த ஆலயம் அகற்றப்பட்டது. பின், சேலம் ஆயர் சிங்கராயர் முயற்சியால், அப்பகுதியிலேயே புது ஆலயம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் முகப்பில், எங்கள் குடும்ப செலவில், புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 65 அடி உயரத்தில், இயேசு கிறிஸ்துவின், பைபர் சிலை அமைக்கப்பட்டது. அச்சிலையை, 2013 டிச., 21ல், சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் அர்ச்சிப்பு செய்து திறந்து வைத்தார். பாதம், 15 அடி அகலம். முக அளவு, 5 அடி. பாதத்தில் இருந்து தலை வரை, உட்புறத்தில் ஏணி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. தற்போது, நாட்டில் மிக உயரமான இயேசு கிறிஸ்து சிலையாக விளங்குகிறது. இச்சிலையை காண, புனித செபஸ்தியார் ஆலயத்துக்கு, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X