தர்மபுரி: ஆங்கில புத்தாண்டுக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் இ- சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி, தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிகா பட்டாசு கடை வைக்க விருப்பமுள்ளவர்கள், 2008ம் ஆண்டு வெடிபொருட்கள் விதிகளின் படி, கல் கட்டடம் அல்லது தார்சு கட்டடத்தில் கடைகள் வைக்க வேண்டும். கடைகளுக்கு, இருபுறம் வழி அமைக்க வேண்டும். இதற்காக, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, போலீசாரிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்று, ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, நிலத்தின் பட்டா அல்லது சொத்து பத்திரம், நோட்டரி வக்கீல் கையொப்பத்துடன், அசல் வாடகை பத்திரம், உரிமை கட்டணம், 500 செலுத்தி அதற்கான அசல் ரசீது, கட்டட வரைபடம் மற்றும் உரிய ஆவணங்களுடன் தங்களது பகுதிகளில் உள்ள, இ- சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE