தர்மபுரி: மண் பரிசோதனை செய்து, பிரச்னைக்குரிய மண்ணை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளயிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் அனைவரும், மண் பரிசோதனை செய்து, அவர்களின் மண்ணில் உள்ள பிரச்னைகளை அறிய வேண்டும். களர் நிலத்தை கண்டறிதலும், அ?தை சீர்திருத்தும் முறைகள், களர் மண் வெயில் காலங்களில் பாறை போல் இறுகியும், மழைக்காலங்களில் அதிக சதசதப்பாகவும் இருக்கும். இம்மண்களில் தண்ணீர் எளிதில் வடியாமல் நீண்ட நாட்கள் தேங்கி நிற்கும். இந்நிலையில், மண்ணின் தண்ணீர் ஊடுருவும் தன்மை குறைந்து காணப்படும். இவ்வகையான மண்ணை கண்டறிந்து, உடனடியாக மண் பரிசோதனை நிலை யத்தை அணுகி, மண் பரிசோதனை செய்து, உரிய சீர்திருத்த முறைகளை கையாள விவசாயிகள் முற்பட வேண்டும். மேலும், களர் மண்ணினால் ஏற்படும் தீமைகள், மண்ணின் குணம் குறித்து விவசா யிகள் அறிய வேண்டும். மேலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுதல் நுண்ணுயிர்களின் செயல்பாடு வளர்ச்சி தடை படுதல் ஆகியவை இதில் அடங்கும். எனவே, தர்மபுரி மாவட்ட விவசாயிகள், மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE