பொது செய்தி

தமிழ்நாடு

கடகத்தூர் அரசு பள்ளியில் மரம் வளர்க்கும் திட்டம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரம் வளர்க்கும் திட்டத்தில், 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.தர்மபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாவட்டத்தை பசுமையாக மாற்றும் நோக்கத்தில், இலவசமாக மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட, 15 அரசு பள்ளிகளில் இத்திட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரம் வளர்க்கும் திட்டத்தில், 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.


தர்மபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாவட்டத்தை பசுமையாக மாற்றும் நோக்கத்தில், இலவசமாக மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட, 15 அரசு பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது குறித்த தகவலின்படி, கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் புவனா, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புடன், தம் பள்ளியிலும் மரம் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த விரும்பி முயற்சி எடுத்தார். சமூக ஆர்வலர்கள் மூலம், மரக்கன்றுகள் பெறப்பட்டன. இதையடுத்து, மரம் வளர்க்கும் திட்ட துவக்க விழா, கடகத்தூர் பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் (பொ) சேகர் தலைமை வகித்தார். தர்மபுரி, சி.இ.ஓ., கீதா, மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். நிகழ்ச்சியில், 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் சாமுவேல், பாலவாடி பள்ளி ஆசிரியர் சங்கர், சமூக ஆர்வலர்கள் சுகுமார், தேவராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலு, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X