கம்பைநல்லூர்: கம்பைநல்லூர் அருகே, மாரடைப்பால் உயிரிழந்த காவலரின் உடல், 21 குண்டுகள் முழங்க, அடக்கம் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த நவலையை சேர்ந்தவர் ராஜசேகர், 27; இவர், கடந்த, 2018ல், போலீசில் சேர்ந்தார். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி ஸ்டேஷனில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்த உறவினரை பார்க்க, நேற்று முன்தினம், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்திருந்த அவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அவர் உயிரிழந்தார். இதையடுத்து, நேற்று மதியம், 2:00 மணிக்கு, நவலையில் உள்ள மயானத்தில், அரூர் டி.எஸ்.பி., தமிழ்மணி தலைமையில், 21 குண்டுகள் முழங்க, போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE