தர்மபுரி: எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, அ.தி.மு.க.,வினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்திலுள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமையில், அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் வெற்றிவேல், ஆவின் சேர்மன் அன்பழகன், நகர செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று காரிமங்கலம், பாலக்கோடு உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு, அப்பகுதிகளை சேர்ந்த, அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., 33வது, நினைவு நாளை முன்னிட்டு, அரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான சம்பத்குமார் தலைமையில், அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர் பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், அ.ம.மு.க., சார்பில், அரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான முருகன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE