ஓசூர்: ஓசூர் வட்டாரத்திலுள்ள, வேளாண் துறை விதைப்பண்ணைகளை, விதைச்சான்று உதவி இயக்குனர் பார்வையிட்டார். ஓசூர், வட்டார வேளாண் துறை மூலம், 132 ஹெக்டேரில், நெல், ராகி, துவரை, கொள்ளு, நிலக்கடலை விதைப்பண்ணைகள் உள்ளன. விவசாய நிலங்களில், வேளாண் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த விதைப்பண்ணைகள் மூலம், சாகுபடி செய்யப்படும் பயிர்களை, அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்த விதைப்பண்ணைகளை, மாவட்ட விதைச்சான்று, உதவி இயக்குனர் அருணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சீக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள சுப்பிரமணி என்பவரது துவரை விதை குவியலை பார்வையிட்டார். மேலும், அச்சந்திரம் கிராமத்தில் துவரை விதைப்பண்ணை வயல் மற்றும் ஓசூர் விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது, விதைச்சான்று அலுவலர் குமரேசன் மற்றும் துணை வேளாண் அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர் செல்லய்யா உடனிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE