தங்கம் கடத்தலுக்கு உதவிய ஏர் இந்தியா அதிகாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கம் கடத்தலுக்கு உதவிய ஏர் இந்தியா அதிகாரி கைது

Added : டிச 25, 2020
Share
திருச்சி: தங்கம் கடத்த உதவிய ஏர் இந்தியா ஊழியர் உள்பட ஐந்து பேரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்து, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து நேற்று திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணியரை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால்

திருச்சி: தங்கம் கடத்த உதவிய ஏர் இந்தியா ஊழியர் உள்பட ஐந்து பேரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்து, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து நேற்று திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணியரை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் தங்கம் ஏதும் சிக்கவில்லை. இந்நிலையில், திருச்சி விமான நிலையம் வெளியே கடத்தல் தங்கம் கைமாறுவதாக வந்த தகவலால், அதிகாரிகள் விமான நிலையம் வெளியே கண்காணித்தனர். அப்போது திருச்சியில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் கோபிநாத், 50 என்ற அதிகாரி, கடத்தல் தங்கத்தை கொண்டு வந்து, வெளியாட்களிடம் கொடுக்க முயன்றார். அப்போது கண்காணிப்பில் இருந்த அதிகாரிகள், கோபிநாத்தை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கொடுத்த தகவல்படி விமான நிலையம் வெளியே சுற்றித்திரிந்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தங்கம் கடத்தலுக்கு ஏர் இந்தியா அதிகாரியே துணையாக இருந்தது கஸ்டம்ஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X