பொது செய்தி

தமிழ்நாடு

பயன்படுத்திய பி.பி., கிட் உடைகள் சாலையில் கிடந்ததால் மக்கள் அச்சம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
ஓசூர்: பயன்படுத்தப்பட்ட, பி.பி., கிட் உடைகள் தேசிய நெடுஞ்சாலையில் கிடந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.பிரிட்டனில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால், கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் அருகே, தமிழக எல்லை ஓசூரிலும், இந்த புதிய வகை வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம், பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து,

ஓசூர்: பயன்படுத்தப்பட்ட, பி.பி., கிட் உடைகள் தேசிய நெடுஞ்சாலையில் கிடந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


பிரிட்டனில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால், கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் அருகே, தமிழக எல்லை ஓசூரிலும், இந்த புதிய வகை வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம், பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலை மற்றும் மேம்பாலத்தின் மீது நேற்று, பயன்படுத்தப்பட்ட பி.பி., கிட் உடைகள் அதிகளவில் கிடந்தன. இவை காற்றில் பறந்து சாலையோர கடைகள் மற்றும் ஓட்டல்களின் முன் விழுந்தன. இவற்றை, ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள், நேற்று காலையில் அவசர அவசரமாக சேகரித்து எரித்தனர். ஆனால் அதற்குள், இந்த உடைகள் காற்றில் பறந்து சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பயன்படுத்தப்பட்ட முக கவசம், கையுறை, கொரோனா தடுப்பு உடைகளை மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த, சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை கொரோனா வார்டில் பயன்படுத்தும், பி.பி., கிட் உடையை, சாலையில் வீசிச்சென்றது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X