நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, 20 காசு உயர்ந்து, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணய ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டு, தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலையை, 20 காசுகள் உயர்த்தி, 510 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்): சென்னை, 520, ஐதராபாத், 519, விஜயவாடா, 516, பர்வாலா, 550, மும்பை, 566, மைசூரு, 530, பெங்களூரு, 530, கோல்கட்டா, 560, டில்லி, 571. அதேபோல் முட்டை கோழி விலை, 61 ரூபாய், கறிக்கோழி விலை, 95 ரூபாயாக தொடர்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE