புதுடில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 9 முறை லோக்சபா எம்.பி.,யாகவும், 2 முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். மேலும், 3 முறை இந்திய பிரதமராகவும் பதவி வகித்துள்ள அவரது பிறந்தநாளான டிச.,25ம் தேதியை தேசிய நல்லிணக்க தினமாக பா.ஜ., அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வாஜ்பாயின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு டில்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடம் அமைந்துள்ள ‛சதைவ் அதல்' பகுதியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛முன்னாள் பிரதமர் வணக்கத்திற்குரிய அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தனது தொலைநோக்குத் தலைமையின் கீழ், நாட்டை முன்னோடியில்லாத வகையில் வளர்ச்சியின் உயரத்திற்கு கொண்டு சென்றார். வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டியெழுப்ப அவர் எடுத்த முயற்சிகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்,' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE