வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் தினமான இன்று, உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, தேவாலயங்களுக்குள் அனுமதிப்பதற்கு முன், அவர்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாடிகன், இயேசு பிறந்த பெத்லேஹேம், அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விருந்து, கலை நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன.

ரோம் நகரில், போப் பிரான்சிஸ், சமூக இடைவெளியை பின்பற்றி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். வழக்கமாக ஆயிரகணக்கானோர் பங்கேற்கும் வழிபாட்டில், சமூக இடைவெளியை பின்பற்ற இந்த முறை 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் மாஸ்க் அணிந்து கலந்து கொண்டனர். அப்போது போப், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இத்தாலியில், வழக்கத்திற்கு மாளாக முன்னதாகவே, தேவாலயங்களில் மணிகள் ஒலிக்க விடப்பட்டன. இத்தாலியில், இரவு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இரவான சில மணி நேரங்களில் அங்கு தேவாலயங்களில் வழிபாடுகள் துவங்கின.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில், கிறிஸ்துமசை முன்னிட்டு நீருக்கடியில் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு, சான்டா கிளாஸ் வேடமணிந்தவர்கள் நடனமாடி பார்வையாளர்களை சந்தோஷப்படுத்தினர்.

கொரோனா பரவல் காரணமாக, ஐரோப்பாவில் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறிஸ்துமஸ் முன்னிட்டு சென்னை சாந்தோம் ஆலயம், மற்றும் கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் மெழுகு ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE