அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

Added : டிச 25, 2020
Share
Advertisement
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெரியதாழை கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என, காஙகிரஸ் டில்லி மேலிடம்
Congress,காங்கிரஸ்

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெரியதாழை கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.

புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என, காஙகிரஸ் டில்லி மேலிடம் உத்தரவிட்டது. சோனியா பிறந்தநாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில், துாத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெரியதாழை கிராமத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார். அதை தொடர்ந்து சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட செல்வன் மனைவி 7 மாத கைக்குழந்தையுடன் கஷ்டப்படுவதால், அவருக்கு உதவி தொகையும், அமிர்தராஜ் வழங்கினார். மேலும், கைக்குழந்தையுடன் தவிக்கும் பெண்ணுக்கு, அரசு வேலையும் வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X