பெங்களூரு:துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மூன்று நாள் அரசு முறை பயணமாக, வரும், 29 ல் பெங்களூரு வருகிறார்.டில்லியிலிருந்து தனி விமானம் மூலம், 29ல், காலை, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். அவரை, கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலா, முதல்வர் எடியூரப்பா உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.விமான நிலையத்திலிருந்து நேராக, பெங்களூரு ஹொஸ்கோட்டில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துக்கு செல்கிறார். அந்த மையத்தை ஆய்வு செய்த பின், ராஜ்பவனில் தங்குகிறார். அன்றிரவு கவர்னர் வஜுபாய் வாலா, துணை ஜனாதிபதிக்கு விருந்தளிக்கிறார்.மறுநாள், 30லும் பெங்களூரில் தங்கும் அவர், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அதன் பின், 31 காலை, பெங்களூரிலிருந்து, தனி விமானம் மூலம், சென்னை புறப்படுகிறார்.துணை ஜனாதிபதி வருகையை ஒட்டி, பெங்களூரு நகர் முழுவதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE