பெங்களூரு:
இரண்டாம் கட்டமாக, 2,709 கிராம பஞ்சாயத்துகளுக்கு, நடக்கவுள்ள தேர்தலுக்கு, இன்று மாலை, 5:00 மணியுடன் பகிரங்க பிரசாரம் நிறைவு பெறுகிறது.கர்நாடகாவில், பதவி காலம் நிறைவடைந்த, 3,019 கிராம பஞ்சாயத்துகளுக்கு, கடந்த, 22ல் ஓட்டுப்பதிவு நடந்தது.இரண்டாம் கட்டமாக, இரண்டாம் கட்டமாக, 109 தாலுகாக்களின், 2,709 கிராம பஞ்சாயத்துகளின், 43 ஆயிரத்து, 291 பதவிகளுக்கு, வரும், 27 ல் தேர்தல் நடக்கிறது.மொத்தம், ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 649 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 216 பதவிகளுக்கு, ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 546 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்றக் கொள்ளப்பட்டது. 3,697 பேர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இறுதியாக, 39 ஆயிரத்து, 378 பதவிகளுக்கு, ஒரு லட்சத்து, 5,431 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இரண்டாம் தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம், இன்று மாலை, 5:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள், காலை, 7:00 - மாலை, 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம், மும்முரமாக செய்து வருகிறது. ஓட்டுப்பதிவு பயிற்சியை, மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் ஊழியர்களுக்கு அளித்துள்ளது.நாளை, அனைத்து மாவட்ட கருவூலங்களிலிருந்து ஓட்டுச்சீட்டுகளும், ஓட்டுப்பெட்டிகளும் அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படவுள்ளன. இதற்காக, அரசு பஸ்கள், தனியார் வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்ட தேர்தலின் போது, ஆங்காங்கே சில பிரச்னை எழுந்ததால், இரண்டாம் கட்ட தேர்தலின் போது, அவ்வாறு நடக்காத வகையில், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இரண்டு கட்ட, கிராம பஞ்சாயத்து தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும், 30ல் எண்ணப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE