சி.வி.ராமன் நகர்: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டில் இளைஞர்களுக்கு விற்கவிருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள், பெங்களூரு சி.வி.ராமன் நகர் டீக்கடையில் பறிமுதல் செய்யப்பட்டது. இரு நைஜீரிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, சி.வி.ராமன் நகர், பாக்மனே டெக் பார்க் மென்பொருள் பூங்கா பின் பகுதியில், டீக்கடை உள்ளது. இந்த கடையில், போதை பொருள் விற்பதாக, பையப்பனஹள்ளி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த டான்சுக்ஸ் ஓகிகி, 39, செலஸ்டின் அனுக்வே, 40, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,300 எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரைகளும், 600 கிராம் எடை போதை பொடியும் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மாத்திரைகள், இணையதளம் மூலம், முறைகேடாக விமானத்தில் வரவழைக்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.இருவரிடமும் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டில் இளைஞர்களுக்கு போதை பொருள் விற்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை கையும், களவுமாக பிடித்த பையப்பனஹள்ளி போலீசாருக்கு, 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கி, பெஙகளூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE