மல்லேஸ்வரம்: மல்லேஸ்வரத்தின், அரசு பள்ளியின், 1,000 மாணவர்களுக்கு, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, 'டேப்' எனப்படும், கையடக்க மடிக்கணினி வழங்கினார்.மல்லேஸ்வரம் சட்டசபை தொகுதியில், 21 அரசு உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 8, 9, 10ம் வகுப்பு படிக்கும், 1,000 மாணவர்கள் உள்ளனர். கொரோனாவால், ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில், அரசு பள்ளி மாணவர்கள், பின் தங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த, தொகுதி, எம்.எல்.ஏ.,வும், துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, 1,000 அரசு பள்ளி மாணவர்களுக்கும், டேப் என்ற கையடக்க மடிக்கணினியை நேற்று வழங்கினார்.பின், அவர் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவும், ஏழை மாணவர்களால் டேப்களை வாங்க முடியாததாலும், இலவசமாக வழங்கப்பட்டன.இதன் மூலம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும், ஆன்லைனில் படிக்க வசதியாக இருக்கும். தரமான டேப்கள் வழங்கப்பட்டுள்ளதால், நவீன கால கல்வியின் படங்கள், வீடியோக்கள் போன்ற உயர்தர அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.சிக் ஷனா அறக்கட்டளை உதவியுடன், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, எளிமையாக படிக்கும் வகையில், டேப்பில் உள்ளடக்கியுள்ளது.வீட்டில் இருக்கும் போதும் அல்லது வேறு இடத்துக்கு செல்லும் போதும், 'டேப்' மூலம் படிக்க வசதியாக இருக்கும்.ஆன்லைன் மூலம், வகுப்புகள் நடத்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டு பாடம் வழங்குவது, தேர்வு நடத்துவது ஆகியவை குறித்து பேச்சு நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE