எடியூரப்பா மீது சித்தராமையா குற்றச்சாட்டு

Added : டிச 25, 2020
Share
Advertisement
பெங்களூரு: ''சட்ட விரோத அரசு நிலத்தை, விதிமுறை மீறி, நில மறு அறிவிப்பு செய்த வழக்கில், முதல்வர் எடியூரப்பாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவர் இனியும் பதவியில் தொடர தகுதியற்றவர்,'' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரு, தேவரபீசனஹள்ளியில், அரசு நிலத்தை விதிமுறை மீறி, மறு அறிவிப்பு செய்தது தொடர்பாக, கர்நாடகா லோக் ஆயுக்தாவில், சிலர்

பெங்களூரு: ''சட்ட விரோத அரசு நிலத்தை, விதிமுறை மீறி, நில மறு அறிவிப்பு செய்த வழக்கில், முதல்வர் எடியூரப்பாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவர் இனியும் பதவியில் தொடர தகுதியற்றவர்,'' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு, தேவரபீசனஹள்ளியில், அரசு நிலத்தை விதிமுறை மீறி, மறு அறிவிப்பு செய்தது தொடர்பாக, கர்நாடகா லோக் ஆயுக்தாவில், சிலர் புகார் செய்திருந்தனர்.இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, முதல்வர் எடியூரப்பா, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை, ரத்து செய்ய முடியாது என கூறியிருந்தது.இது குறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று கூறியதாவது:எடியூரப்பா மீதான நில மறு அறிவிப்பு வழக்கை, ரத்து செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்ததால், உடனடியாக, தன் பதவியை ராஜினாமா செய்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.அரசு நிலத்தை, விதிமுறையை மீறி, நில மறு அறிவிப்பு செய்துள்ளார். 2011 ல், இவ்வழக்கு பதிவானது. எடியூரப்பா இரண்டாவது, 'ஏ2' குற்றவாளியாக, வழக்கு பதிவில் கூறப்பட்டுள்ளது.எனவே, எடியூரப்பா, ராஜினாமா செய்வதை விட, வேறு வழியில்லை. அவர், தொடர்ந்து பதவியில் இருந்தால், வழக்கு விசாரணை, திசை திருப்பும் வாய்ப்புள்ளது.ஏனென்றால், லோக் ஆயுக்தா, அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவ்வழக்கையும் லோக் ஆயுக்தாவே விசாரிக்கும். எனவே, அவர், தனது அதிகார பலத்தை காண்பிக்கும் வாய்ப்புள்ளது.தொழிற்சாலை அமைப்பதற்காக, அரசு நிலம் சட்ட விரோதமாக, நில மறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இது சாதாரண வழக்கல்ல. ஊழலற்ற ஆட்சி குறித்து பேசும், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது, அவரது கண்ணுக்கு தெரியவில்லையா.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X