யஷ்வந்த்பூர்:குடும்ப பிரச்னையால், ரயில்வே தண்டவாளத்தின் மீது படுத்து கொண்டு, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, ரயில்வே பாதுகாப்பு ஊழியர் காப்பாற்றினார்.பெங்களூரு, யஷ்வந்த்பூர் அருகிலுள்ள, கொல்லஹள்ளி ரயில் நிலையத்தில், அருண்குமார் என்ற ரயில்வே பாதுகாப்பு ஊழியர் பணியாற்றுகிறார்.கொல்லஹள்ளி ரயில் நிலையத்திலிருந்து, 100 மீட்டரில், பெண்ணொருவர், தண்டவாளத்தின் மீது படுத்து, தற்கொலைக்கு முயற்சித்தார். இவ்வேளையில், வாஸ்கோடாகாமா சிறப்பு விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அருண்குமார் ஓடி சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில், தண்டவாளத்தில் படுத்திருந்த பெண்ணை காப்பாற்றினார்.அடுத்த பத்து வினாடிகளில், அந்த வழியாக ரயில் சென்றது. பின், அந்த பெண்ணை விசாரித்த போது, குடும்ப பிரச்னையால், தற்கொலைக்கு முயன்றதாக, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அவருக்கு புத்திமதி கூறி, குடும்பத்தினரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு ஊழியரை, பலரும் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE