போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வினோத தீர்ப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
கலபுரகி : காணாமல் போன் மகனை கண்டுபிடிக்கும்படி புகார் அளிக்க வந்த தாயிடம், புகாரை பெறாமல் திருப்பி அனுப்பிய, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கர்நாடக உயர்நீதிமன்ற, கலபுரகி கிளை, காவல் நிலையம் முன் உள்ள சாலையை, ஒரு வாரம் துாய்மைப்படுத்தும்படி வினோத தீர்ப்பு அளித்துள்ளது.கலபுரகி நகர், மிணஜகி தாண்டா பகுதியை சேர்ந்தவர், தாராபாய். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். இவரது

கலபுரகி :
காணாமல் போன் மகனை கண்டுபிடிக்கும்படி புகார் அளிக்க வந்த தாயிடம், புகாரை பெறாமல் திருப்பி அனுப்பிய, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கர்நாடக உயர்நீதிமன்ற, கலபுரகி கிளை, காவல் நிலையம் முன் உள்ள சாலையை, ஒரு வாரம் துாய்மைப்படுத்தும்படி வினோத தீர்ப்பு அளித்துள்ளது.

கலபுரகி நகர், மிணஜகி தாண்டா பகுதியை சேர்ந்தவர், தாராபாய். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். இவரது மகன் சுரேத் என்பவர், அக்., 20 முதல் காணாமல் போனார். இது குறித்து, ஸ்டேஷன் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருந்தார். அப்போது, புகாரை வாங்க மறுத்த போலீசார், காணாமல் போன மகனை, கண்டுபிடிக்கவும் அக்கறை காட்டவில்லை.இது குறித்து, தாய் தாராபாய், மகனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடும்படி கோரி, கர்நாடக உயர்நீதிமன்ற, கலபுரகி கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த, நவ., 3 ல், காணாமல் போன மகனை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இவ்வழக்கு தொடர்பாக, நீதிபதிகள் சுனில் தத் யாதவ், கிருஷ்ணபட் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'காணாமல் போன் மகனுக்காக, நீதிமன்றம் வர வேண்டிய சூழல் ஏற்படுத்திய போலீசாரின் செயல் சரியில்லை. 'கடமை தவறிய, ஸ்டேஷன் பஜார் இன்ஸ்பெக்டர், ஒரு வாரம், காவல் நிலையம் முன்பு உள்ள சாலையை, துாய்மைப்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X