துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், குளத்துவாய்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 73; சித்த வைத்தியர். இவரது இரண்டாவது மனைவியின் மகன் புருஷோத்தமன், 23. டிப்ளமோ படித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.நேற்று முன்தினம் இரவில், புருஷோத்தமன் மாத்திரை உட்கொள்ளவில்லை. அவரை மாத்திரை சாப்பிட தந்தை வற்புறுத்தினார். அவர் மறுத்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், உலக்கையால் தந்தையின் தலையில் தாக்கியதில், அவர் இறந்தார். புருஷோத்தமன் கைது செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE