ஒரு ரூபாய்க்கு சாப்பாடு; பா.ஜ., எம்.பி., கவுதம் காம்பீர் கலக்கல்| Dinamalar

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு; பா.ஜ., எம்.பி., கவுதம் காம்பீர் கலக்கல்

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (31)
Share
புதுடில்லி: கிழக்கு டில்லி தொகுதி பா.ஜ., எம்.பி.,யான கவுதம் காம்பீர், ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கடந்த 2019ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்து, கிழக்கு டில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்.பி., ஆனார். இந்நிலையில், அவருடைய கிழக்கு டில்லி தொகுதியின் காந்தி நகர் பகுதியில் ஏக் ஆஷா ஜன ரசோய் என்ற
BJP_MP, GautamGambhir, Delhi, Meal, Re1, Kitchen, கவுதம் காம்பீர், சாப்பாடு, அறக்கட்டளை,

புதுடில்லி: கிழக்கு டில்லி தொகுதி பா.ஜ., எம்.பி.,யான கவுதம் காம்பீர், ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கடந்த 2019ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்து, கிழக்கு டில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்.பி., ஆனார். இந்நிலையில், அவருடைய கிழக்கு டில்லி தொகுதியின் காந்தி நகர் பகுதியில் ஏக் ஆஷா ஜன ரசோய் என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார். இத்திட்டத்தின்கீழ், கவுதம் காம்பீர் அறக்கட்டளையானது 1 ரூபாய்க்கு உணவு வழங்கும்.


latest tamil news


இது குறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது: உணவின்றி வெறும் வயிற்றுடன் ஒருவரும் உறங்க செல்ல கூடாது என நாங்கள் விரும்புகிறோம். அதனால், டில்லியில் இதுபோன்று 5 அல்லது 6 சமையற்கூடங்களை விரைவில் திறக்க இருக்கிறோம். சாதி, மதம், இன பேதமின்றி ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுகாதார உணவு பெறுவதற்கு உரிமை உள்ளது என நான் எப்பொழுதும் நினைப்பவன். வீடின்றி, கைவிடப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.


latest tamil news


இந்த திட்டத்தின்படி, ஒரு தட்டு உணவுக்கு ரூ.1 கொடுக்க வேண்டும். நாளொன்றுக்கு மொத்தம் 500 பேருக்கு உணவு வழங்கப்படும். இரண்டாவது முறையாகவும் உணவு பெற்று கொள்ளலாம். உணவு தேவையானவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க, சுகாதாரம் நிறைந்த உணவு வழங்கப்படும். கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள சூழலில், கேண்டீனில் ஒரு நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X