புதுடில்லி: ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 'கிசான்' திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் நரேந்திர மோடி வழங்குவதை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பிரதமர் மோடி ஆன்லைன் மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பிரதமரின் 'கிசான்' திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த ஆண்டின் மூன்றாவது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்கும் பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணிக்கு துவங்கி வைத்து, 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
கிசான் கிரெடிட் கார்டு பலன்
ஒடிசா மாநில விவசாயிகளிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கிசான் கிரெடிட் கார்டு மற்றும் அதன் மூலம், குறைந்த வட்டியில் கடன் வாங்கும் முடியும் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளதை, விவசாயிகளிடம் விளக்க வேண்டும் என்றார்.

அப்போது நவீன் என்ற விவசாயி கூறுகையில், 2019ம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு வாங்கினேன். அதன் மூலம் 4 சதவீத வட்டியில், 27 ஆயிரம் கடன் வாங்கினேன். இது இடைத்தரகர்களிடம் வழங்கும் வட்டியை விட 20 சதவீதம் குறைவு என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE