பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினருக்கு பயிற்சி

Added : டிச 25, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை, சப்-கலெக்டர் அலுவலகத்தில், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மஞ்சு தலைமை வகித்தார். இளைஞர் நீதி சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு பொறுப்பு மற்றும் கடமைகள் குறித்து, குழந்தைகள்

குளித்தலை: குளித்தலை, சப்-கலெக்டர் அலுவலகத்தில், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மஞ்சு தலைமை வகித்தார். இளைஞர் நீதி சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு பொறுப்பு மற்றும் கடமைகள் குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் மோகன் பயிற்சியளித்தார். தொடர்ந்து, குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை உரிமைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, நன்னடத்தை அலுவலர் ரவி சந்திரன் விளக்கம் அளித்தார். மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ஜெயசித்ரா, குறும்படம் மூலம் பயிற்சியளித்தார். இதில், 90க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X