கரூர்: பொங்கலை முன்னிட்டு மஞ்சள் சாகுபடியில் தீவிரமாக ஈடுபடும் நிலையில், உரிய விலை கிடைக்க நடவடிக்கை தேவை என, விவசாயிகள் தெரிவித்தனர்.
கரூர், க.பரமத்தி ஒன்றியங்களில், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில், கிணற்று மற்றும் ஆற்று பாசனத்தை நம்பி மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் பொங்கலுக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும். சிறிய அளவிலான மஞ்சள், தோகையுடன் பறிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படும். மேலும், மஞ்சள் வெட்டியெடுத்து பதப்படுத்தப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும். பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் பயிர்கள், நோய் தாக்குதல் இல்லாமல் தற்போது செழித்து வளர்ந்துள்ளன. இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் போதிய பருவமழை, கிணற்று பாசனம், ஆறு, வாய்க்கால் பாசனத்தை நம்பி இப்பகுதியில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். குறைந்தளவு நீரிலும் மஞ்சள் துளிர் விட்டு நன்கு வளர்ந்துள்ளது. இதனால் அறுவடை காலத்தில் விளைச்சல் அமோகமாக இருக்கும் என, நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE