கரூர்: 'தொழிலாளர் நல நிதியை வரும் ஜன.,31க்குள் செலுத்த வேண்டும்' என, கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகள், தங்கள் பங்காக, 10 ரூபாய், வேலையளிப்பவர் பங்கு, 20 ரூபாய் சேர்த்து மொத்தம், 30 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். அதன்படி, 2020ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும், ஜனவரி, 31க்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதி புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இணையதளம் வாயிலாக அல்லது ''The Secretary, Tamilnadu Labour Welfare Board, Chennai 600 006' என்ற பெயருக்கு வங்கி வரைவோலையை, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ்., வளாகம், தேனாம்பேட்டை சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE