குளித்தலை: அய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோவிலில், ரோப் கார் (கம்பி வட ஊர்தி) அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவில், சிவாலயலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக உள்ளது. இந்த மலைக்கோவில், 1,017 படிகள் கொண்டது. பக்தர்கள், குடிப்பாட்டுக்காரர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்யமுடியாததால், ரோப் கார் அமைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பங்களிப்புடன் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில், பூமி பூஜையுடன் பணி தொடங்கியது. இந்நிலையில் பணியில் தொய்வு ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணியை ஆய்வு மேற்கொண்டு, விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று, ரோப்கார் பணியை கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார். ஹிந்து சமய அறநிலைய துறை உதவி செயற்பொறியாளர் விஜயா, துணை பொறியாளர் குணசேகரன், கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர். 'விரைந்து பணிகளை முடிக்கவும், பணியில் தொய்வு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும், கலெக்டர் எச்சரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE