க.பரமத்தி: கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு, தினசரி, 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு, போதிய வசதி இல்லாததால் அவர்களுக்கு அவசர சிகிச்சை மட்டும் டாக்டர்கள் அளித்து அனுப்பி வைக்கின்றனராம். மேலும், தங்கி சிகிச்சை பெறும் வசதி, பிரசவ பிரிவு ஆகியவை கிடையாது. இந்நிலையைப் போக்க, க.பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தினால், இப்பகுதியினருக்கு, 24 மணிநேரமும் மருத்துவ சேவை கிடைக்கும். க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE