மானாவாரி சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

Added : டிச 25, 2020
Share
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை வட்டாரம் நாவல்பட்டி விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் நீடித்த மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி வழங்கப்பட்டது. உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நீடித்த நிலையான மானாவாரி திட்ட செயல்பாடு, கோடை உழவின்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை வட்டாரம் நாவல்பட்டி விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் நீடித்த மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி வழங்கப்பட்டது. உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நீடித்த நிலையான மானாவாரி திட்ட செயல்பாடு, கோடை உழவின் முக்கியத்துவம், மழை நீர் சேமிப்புக்கு கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும், கோடை உழவு மானியம் மற்றும் விதைப்பு மானியம் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொண்டார். பயிர் காப்பீட்டு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், மக்காச்கோள படைப்புழு மேலாண்மை, உழவன் செயலி பதிவிறக்கம், துணை விதைப்பண்ணை அமைப்பது மற்றும் அதன் பயன்கள் குறித்து வேளாண் அலுவலர் பேசினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் மேனகா செய்திருந்தார். பயிற்சியில் கலந்து கொண்ட, 40 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X